ஆயிரம் வழக்கு போட்டாலும் எதிர்கொள்வேன்: விடுதலைக்கு பின் கருணாஸ் பேட்டி

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஆகியோர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக நடிகரும் திருப்புவனம் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிற்காக அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 'ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து சற்றுமுன் கருணாஸ் வேலூரி சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், 'இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்றும், என்மீதான வழக்கில் உண்மை நின்றது; நீதி வென்றதாகவும் கூறினார்.

இந்த நிலையில் 2 வழக்குகளில் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ள கருணாஸ் எம்எல்ஏ, திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ் நடிகை மீது தமிழக பாஜக பதிவு செய்த வழக்கு

சிம்பு நடித்த 'குத்து', தனுஷ் நடித்த 'பொல்லாதவன் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடியை 'திருடர்' என விமர்சனம் செய்தார்.

ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கபாலி. 24, காஷ்மோரா, மெட்ராஸ், சண்டக்கோழி-2 உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியவர்கள் அன்பறிவ்

'சர்கார்' பாடல் விமர்சனத்திற்கு பாடலாசிரியரின் பதிலடி

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்கார்' சிங்கிள் பாடலான 'சிம்டங்காரான்' பாடல் மிக அதிக பார்வையாளர்களை பெற்று விஜய் ரசிகர்களின் வரவேற்புக்கு உள்ளானாலும்,

இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்: சுனாமி தாக்கியதால் பரபரப்பு

இந்தோனேஷியா நாட்டில் சற்றுமுன் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் 7.7 ரிக்டர் அளவில் இருந்ததால் சுனாமி தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டது

விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரி ரெய்டா?

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு என தகவல்கள் பரவியது.