ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட கர்நாடக மந்திரி… நிவாரணப் பணிகளின்போது பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Wednesday,August 12 2020]

கர்நாடகத்தின் உடுப்பி, தட்சிண கன்னடா, உத்திர கன்னடா போன்ற மாவட்டங்களில் தற்போது கடுமையான மழை பெய்துவருகிறது. தென்மேற்கு பருவமழை வலுவடைந்து இருப்பதால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உடுப்பி மாவட்டத்தின் பொறுப்பு மந்திரி மற்றும் மாநில போலீஸ் மந்திரியுமான பசவராஜ் பொம்மை தனது பொறுப்பில் உள்ள பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக திட்டமிட்டு உடுப்பி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். உடுப்பியில் ஆய்வுகளை செய்துவிட்டு அருகே உள்ள காபு வட்டத்தின் படுபத்ரி கடற்கரைப் பகுதிகளில்  ஏற்பட்ட சேதத்தை அளவிடுவதற்காக கடற்கரைக்கு சென்றிருக்கிறார்.

அரபிக்கடலை ஒட்டிய படுபத்ரியில் கனமழை காரணமாக ராட்சத அலைகள் ஏற்பட்டு இருக்கிறது. அலைகளில் விளையாட நினைத்த பசவராஜ் பொம்மை சிறிது நேரம் கடல் சீற்றத்தைப் பொருட்படுத்தாது குழந்தை போல விளையாடி இருக்கிறார். மேலும் உடுப்பி மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்தன் மற்றும் பா.ஜ.க பிரமுகர் ஒருவரும் உடனிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அரபிக்கடலில் எழுந்த ராட்சத அலை திடீரென்று பசவராஜ் பொம்மையை அலேக்காகக் கடலுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது. உடனே சுதாரித்துக் கொண்ட விஷ்ணுவர்தன் மற்றும் பா.ஜ.க பிரமுகர் இருவரும் சேர்ந்து மந்திரியை பிடித்து இழுத்து அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றியிருக்கின்றனர்.

இந்நிகழ்வு கர்நாடகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஷ் சூப்பிரண்டு சிறிது தாமத்தித்து இருந்தாலும் நிலைமை மோசமாகியிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பசவராஜ் பொம்மை கடல் அலையில் விளையாடி அடித்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

More News

சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரெனத் தீப்பிடித்து எரிந்த சம்பவம்!!! குழந்தை உட்பட 5 பேர் பலி!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்த சம்பவம்

3 லட்சம் கட்டினால்தான் அட்மிட்: மருத்துவமனை கெடுபிடியால் ஆம்புலன்ஸில் உயிரிழந்த கொரோனா நோயாளி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 3 லட்சம் கட்டினால் மட்டுமே அட்மிட் செய்வோம் என்று தனியார் மருத்துவமனை ஒன்று கெடுபிடி செய்ததால் ஆம்புலன்ஸிலேயே அந்த கொரோனா நோயாளி உயிரிழந்த

ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம்: விஜய், மகேஷ்பாபு குறித்து பிரபல நடிகர்

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது வீட்டில் செடியை நட்டு அது குறித்த வீடியோவை பதிவு செய்தார். மேலும் கிரீன் இந்தியா சேலஞ்சை அவர் தளபதி விஜய்க்கும் விடுத்தார்

அஜித்-ஷாலினி காதலுக்கு உதவிய ஏகே 47: பிரபல நடிகர் தகவல்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான அஜித், ஷாலினி காதலுக்கு பிரபல நடிகர் ஒருவரும் ஏகே 47ம், உதவியாக இருந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

அமெரிக்காவில் ரூ.4 கோடி ஸ்காலர்ஷிப் பெற்ற இந்திய மாணவி பரிதாப பலி: ஈவ் டீசிங் காரணமா?

அமெரிக்காவில் சுமார் 4 கோடி ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வந்த இந்திய மாணவி ஒருவர் பரிதாபமாக சாலை விபத்தில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.