'மகதீராவுடன்' கனெக் ஷன் ஆன 'காஷ்மோரா'

  • IndiaGlitz, [Monday,August 08 2016]

கார்த்தி நடிப்பில் கோகுல் இயக்கியுள்ள 'காஷ்மோரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்து இதுவரை வெளிவராத ஒருசில தகவல்களை இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'காஷ்மோரா' திரைப்படத்தில் சிலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய பீரியட் காட்சிகள் சுமார் அரை மணி நேரமும், மீதி தற்போதை காலகட்டத்தில் நடைபெறுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே சுமார் 90 நிமிடங்கள் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார். ஏற்கனவே எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'மகதீரா' திரைப்படம் 400 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தையும், தற்போதைய காலகட்டத்தையும் இணைத்து அமைக்கப்பட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின், மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த பிரமாண்டமான படம் வரும் தீபாவளி திருநாளில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது.

More News

10 வருட திரையுலக வாழ்வில் விஜய்சேதுபதியின் முதல் அனுபவம்

கோலிவுட் திரையுலகில் பத்து வருட திரையுலக வாழ்வில் விஜய்சேதுபதி சுமார் 30 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார்......

மணிரத்னம் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து. பெரும் பொருட்சேதம் என தகவல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது கார்த்தி நடிப்பில் 'காற்று வெளியிடை' என்ற படத்தை இயக்கி வருகிறார்...

மோகினிக்காக த்ரிஷா எடுத்த அதிகபட்ச ரிஸ்க்

இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் 'மோகினி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்று முடிந்தது....

அஜித் 58 படத்தில் இணையும் 'தீனா' பிரபலங்கள்

தல அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில்...

கார்த்தியின் 'காஷ்மோரா' வியாபாரம் தொடங்கியது

கோலிவுட் திரையுலகில் பல தரமான படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்...