close
Choose your channels

'மகதீராவுடன்' கனெக் ஷன் ஆன 'காஷ்மோரா'

Monday, August 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில் கோகுல் இயக்கியுள்ள 'காஷ்மோரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்து இதுவரை வெளிவராத ஒருசில தகவல்களை இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'காஷ்மோரா' திரைப்படத்தில் சிலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய பீரியட் காட்சிகள் சுமார் அரை மணி நேரமும், மீதி தற்போதை காலகட்டத்தில் நடைபெறுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே சுமார் 90 நிமிடங்கள் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார். ஏற்கனவே எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'மகதீரா' திரைப்படம் 400 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தையும், தற்போதைய காலகட்டத்தையும் இணைத்து அமைக்கப்பட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின், மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த பிரமாண்டமான படம் வரும் தீபாவளி திருநாளில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.