close
Choose your channels

கார்த்தியின் 'மெய்யழகன்' 7 மணி அப்டேட் இதுதானா? 'வாடிவாசல்' ஞாபகம் வருதே..!

Friday, May 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் ‘மெய்யழகன்’ இன்று மாலை 5 மணிக்கு வெளியானது என்பதும் அப்போது வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பு பெற்றது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாலை 7 மணிக்கு மீண்டும் ‘மெய்யழகன்’ படத்தின் அப்டேட் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் ‘மெய்யழகன்’ படத்தின் இன்னொரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டரில் கார்த்தி, ஜல்லிக்கட்டு மாட்டை பிடித்தபடி இருக்கும் காட்சியை பார்க்கும் போது இது ஜல்லிக்கட்டு கதையம்சம் கொண்ட படமாக இருக்குமோ என்ற கேள்வி அனைவர் மனதில் இருந்துள்ளது. ஏற்கனவே ’வாடிவாசல்’ திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு காளை உடன் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அதேபோல் கார்த்தியும் ஜல்லிக்கட்டு காளை உடன் ஒரு படத்தில் நடித்திருப்பது யாரும் அறியாத புதிய தகவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கார்த்தி ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் கோவிந்த் வசந்தா இசையில் உருவான இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment