தமிழக தேர்தலும், சிவகார்த்திகேயன், கார்த்தி தயாரிப்பாளர்கள் எடுத்த அதிரடி முடிவுகளும்!

  • IndiaGlitz, [Wednesday,March 10 2021]

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ உள்பட ஒருசில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து நேற்று ‘டாக்டர்’ படத்தின் தயாரிப்பாளர் மார்ச் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்த ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் மேலும் சில படங்கள் சட்டமன்ற தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி அதே தேதியில் இந்த படம் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்

ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நாள் என்பதால் அன்றைய தினம் திரையரங்குகள் இரண்டு காட்சிகள் மட்டும் நடைபெறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ஏப்ரல் 2ஆம் தேதியை விட்டால் சரியான ரிலீஸ் தேதி தங்களுக்கு கிடைக்காது என்பதால் அதே தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த இந்த திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இடம்பெற்ற சிம்பு பாடிய ‘யாரையும் இவ்வளவு அழகா’ என்று பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே.

More News

இதனால் தான் நான் வெளியே செல்வதே இல்லை: 'விஸ்வாசம்' நடிகை வேதனை!

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் இதனால் தான் வெளியே செல்வதில்லை என்று சோகமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருப்பது

திருமண நாளில் சாயிஷா வெளியிட்ட ரொமான்ஸ் புகைப்படம்: லைக் செய்த ப்ரியா அட்லி!

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிகளுக்கு திருமணமாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி ஆர்யா

28 வருடங்கள் கழித்து கார்த்திக் ஜோடியாக நடிக்கும் நடிகை: டைட்டில் அறிவிப்பு!

28 வருடங்களுக்கு முன் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தற்போது மீண்டும் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது 

ஐபிஎல்-இல் நன்மை இருக்கு? இன்னொரு இங்கிலாந்து வீரரின் தடாலடி பதில்!

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடர் போட்டியை நிறைவு செய்து இருக்கிறது.

சொந்த அணியைவிட ஐபிஎல் முக்கியம்? இளம் வீரரின் முடிவால் அதிர்ந்து போன இங்கிலாந்து!

இங்கிலாந்து அணியில் இளம் ஆல் ரவுண்டராக இருந்து வரும் சாம் கரன் தனது சொந்த நாட்டுப் போட்டியை விட சென்னை சிஎஸ்கே எனக்கு முக்கியம் எனக் கூறி இருக்கிறார்