விவசாயி ஆகவே மாறிவிட்ட கார்த்தி

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தி, ஒரு விவசாயி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விவசாயத்தின் பல நுணுக்கங்களை தெரிந்து கொள்ளவும், ஆர்கானிக் விவசாயம் குறித்து அறிந்து கொள்ளவும், நேரடியாக விவசாயிகளை கார்த்தி சமீபத்தில் சந்தித்துள்ளார்

தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின்போது போலீஸ் அதிகாரிகளை சந்தித்து தனது கேர்கடருக்கு மெருகேற்றிய கார்த்தி, 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்காக தற்போது விவ்சாயம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயிகளை நேரில் சந்துத்துள்ளார். குறிப்பாக ஆர்கானிக் விவசாயம் குறித்த பயிற்சி மையங்களை நடத்தி வரும் வேணுகோபால் என்பவரை அவர் தனது குடும்பத்தினர்களுடன் சமீபத்தில் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது விவசாயத்தின் பல நுணுக்கங்களை அவர் அறிந்து கொண்டதாகவும் தெரிகிறது. தான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கும் உயிர் கொடுக்கும் வகையில் கார்த்தி மிகுந்த சிரத்தை எடுத்து கொள்வது அவருக்கு தொழில்மீது இருக்கும் ஆர்வத்தை காட்டுவதாகவே தெரிகிறது.

கார்த்தி, சாயிஷா, பிர்யா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

தினகரனின் குக்கர் சின்னத்திற்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்

டிடிவி தினகரன், சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளையும் தோற்கடித்தார்

புலம்புவதை விட்டு விட்டு ஆம்பளையா இருக்க பழகு - கெளதம்மேனன்

'துருவங்கள் 16' என்ற படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கும் 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு நன்றி கூறிய 'பாகுபலி 'இயக்குனர்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்கள் உலகின் கவனத்தை தென்னிந்தியா பக்கம் திரும்ப வைத்தன

'மெர்சல்' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

'மெர்சல்' எங்கள் நிறுவனத்தின் பெருமைக்குரிய திரைப்படம். மேலும் தளபதி விஜய்யுடன் இணைந்து பணிபுரிந்ததை பெருமையாக கருதுகிறோம் என்று கூறியுள்ளனர்.

கர்நாடக தேர்தல் களத்தில் ராகுல் டிராவிட்டுக்கு தேடி வந்த பதவி

இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் நல்லெண்ண தூதர் பதவியை அளித்துள்ளது.