கார்த்தியின் அடுத்த பட டைட்டில்.. நாயகி உள்பட முழு விபரங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,November 08 2022]

கார்த்தி நடித்த ’விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘ஜப்பான்’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘ஜப்பான்’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஜீவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க உள்ளார்.

இன்றைய பூஜை நிகழ்ச்சியில் கார்த்தி, அனு இமானுவேல், ராஜூமுருகன், ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

உதயநிதியின் அடுத்த படம் குறித்த தகவல்: விரைவில் புரமோஷன் ஆரம்பம்!

உதயநிதி ஸ்டாலின் தற்போது 'கலகத்தலைவன்' மற்றும் 'மாமன்னன்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இவற்றில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 

'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா' பாடல்.. வைரலாகும் செம போஸ்டர்!

அஜித் நடித்து முடித்துள்ள 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் உள்பட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ரோஹித் சர்மாவுக்கு திடீரென ஏற்பட்ட காயம்.. அரையிறுதியில் விளையாடுவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வலைது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் 10ஆம் தேதி நடைபெறும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில்

ஷில்பா ஷெட்டி கட்டியிருக்கும் இந்த புடவையின் விலை இவ்வளவா?

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தென்னிந்திய மொழிகளான தமிழ் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார் என்பதும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன

பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் டிஜிட்டல் உரிமையில் மட்டுமே.. சிம்புவின் 'பத்து தல' பிசினஸ்!

 சிம்பு நடித்து வரும் பத்து தல'  படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.