முதல்வர் பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி வைத்த கோரிக்கை!

வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தாருங்கள் என முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாளில் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தேசிய கட்சியின் தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏஆர் ரகுமான் உள்பட பல திரையுலக பிரபலங்கள் ஏற்கனவே முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து தனது கோரிக்கையும் விடுத்துள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:

மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்!

More News

வெற்றிக் களிப்பில் வங்கத்துச் சிங்கம் மம்தா பானர்ஜி… மேற்கு வங்கத் தேர்தல்!

மேற்கு வங்கச் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்த பாஜக…கேரளாவில் மீண்டும் தொடரும் ஆட்சி!

கேரளாவின் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.

இன்ஸ்டாகிராமில் பிகினி வீடியோவை வெளியிட்ட திருமணமான இளம் நடிகை!

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண்  18/9' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் மனீஷா யாதவ். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன்

தாங்கள் வைத்துள்ள நம்பிக்கை நிறைவேற்றப்படும்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஸ்டாலின் நன்றி!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளது. தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின்

வரும் 7 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.