'மஹான்' படத்தின் வாணிபோஜன் கேரக்டர் என்ன ஆச்சு? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

  • IndiaGlitz, [Saturday,February 12 2022]

விக்ரம் நடித்த ’மஹான்’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் இந்த படத்தின் வெற்றியால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டியது படக்குழுவினர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது வாணிபோஜன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், விக்ரமுடன் வாணிபோஜன் இருக்கும் புகைப்படங்களும் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு வாணிபோஜன் காட்சி இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில் இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் விளக்கமளித்தபோது, ‘சிம்ரனை விக்ரம் பிரிந்த பின்னர் வாணிபோஜனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது என்றும் இது குறித்த காட்சிகள்படமாக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல காட்சிகள் படமாக்க முடியவில்லை என்றும் குறிப்பாக கூட்டம் அதிகமாக உள்ள காட்சிகளை படமாக்க முடியவில்லை என்பதால் வாணிபோஜன் கேரக்டர் படத்திலிருந்து தூக்கப்பட்டுவிட்டதாகவும் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

More News

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அஸ்வின்… ஏலத்தில் சரிந்த சோகம்!

தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை பல அணிகள் போட்டி போட்டி ஏலத்தில் எடுக்கும் எனக் கருதப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அ

ஸ்காட்லாந்தில் நிலம் வாங்கிய தமிழ் சினிமா பிரபலம்… வாழ்த்தும் ரசிகர்கள்!

மாநாடு திரைப்படத்தின் எடிட்டர் பிரவீன் கேல்.எல் சமீபத்தில் ஸ்காட்லாந்தில்

பாடகி வினய்தாவுடன் காதலா? பிரேம்ஜி சொன்ன பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி, பாடகி வினய்தாவை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில்

சிம்பிளா 10 கிலோ weight loss… அஜித் பட நடிகையின் அட்டகாசமான டிப்ஸ்!

அஜித் நடிப்பில் வெளியான “அசல்“ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை சமீரா ரெட்டி. திருமணத்திற்கு

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.