கருணாஸ் பேச்சு ஆச்சரியம் அளிக்கின்றது: நடிகர் கார்த்திக் கருத்து

  • IndiaGlitz, [Friday,September 21 2018]

நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கருணாஸ் பேச்சு குறித்து நடிகரும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக் கூறுகையில் கருணாஸ் பேச்சு ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கருணாஸ் தம்பி அப்படி பேசியிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. ஆனால் ஒன்று நான் சொல்லி கொள்வது என்னவென்றால் தமிழத்தில் வீரர்களுக்கு குறைவில்லை. வீரர்கள் நேருக்கு நேராக நின்று போராடுவார்களே தவிர கோழை போல் கொலை செய்ய மாட்டார்கள். கொலை செய்வது என்னை பொருத்தவரையில் கோழைத்தனம்

இந்தியா முழுவதும் நிராயுதபாணியாக இருப்பவர்களை பிளான் பண்ணி கொலை செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. யாராக இருந்தாலும் கொலை செய்வது என்பது கோழைத்தனம். முக்குலத்து மக்கள் எப்போதும் நேரடியாக நின்று போராடுவார்கள். பழிவாங்கும் செயலான கொலையை செய்ய மாட்டார்கள். கருணாஸ் எந்த அர்த்ததில் அவ்வாறு கூறினார் என்பது எனக்கு தெரியாது. மேலும் யாரையும் பிரித்து பார்க்க வேண்டாம். நாம் எல்லோருமே வீரர்கள் தான். நியாயமான விஷயங்களுக்கு நேராக நின்று போராடுவோம்' என்று கார்த்திக் கூறியுள்ளார்.

More News

இரு சகோதரிகளின் மனவலி: ஆணவக்கொலை குறித்து ஜிவி பிரகாஷின் பதிவு

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆணவக் கொலை காரணமாக கெளசல்யா என்ற பெண்ணின் கணவர் சங்கரை அவரது குடும்பத்தினர்களே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருணாசுக்கு தைரியம் இருந்தால் என்னை அடிக்கட்டும்: அதிமுக எம்எல்ஏ சவால்

சமீபத்தில் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய காமெடி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், 'நான் அடிப்பேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே பயந்தார்'

கத்துவது, பொய் சொல்வது, அழுவது இதுதான் ஐஸ்வர்யாவின் வேலை: பிக்பாஸ் 1 பிரபலம்

ஐஸ்வர்யாவின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்த்து அவரை திட்டாதவர்களே இல்லை என கூறலாம்.

அடுத்த படத்தில் இசையமைப்பாளராகும் விஜய்சேதுபதி

கோலிவுட் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதி நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாகவுள்ளது. 'செக்க சிவந்த வானம்' மற்றும் '96' ஆகிய படங்கள் இவற்றில் முக்கியமானது

தலைமறைவான கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள்

சமீபத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில்