இந்த கேஸ்ல ஜெயிச்சேன்னா நான் வேற எங்கேயோ போயிடுவேன்: 'கருமேகங்கள் கலைகின்றன' டிரைலர்..!

  • IndiaGlitz, [Monday,August 14 2023]

பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இந்த ட்ரெய்லரின்படி பாரதிராஜா தந்தையாகவும் கௌதம் மேனன் மகனாகவும் நடித்திருக்கும் நிலையில் ஒரே வீட்டில் இருக்கும் இவர்கள் 10 வருடமாக ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருக்கிறார்கள். இவர்களுக்குள் என்ன பிரச்சனை? இறுதியில் இவர்களுக்குள் சமாதானமாகி பேசினார்களா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரியவருகின்றது.

இன்னொரு பக்கம் யோகி பாபு தனது மனைவி மற்றும் மகளை பிரிந்து இருக்கும் நிலையில் மகளை பாசத்துடன் பார்க்க வரும்போது என்ன ஏற்படுகிறது என்பதும் ஒரு கதையாக ஓடுகிறது.

மொத்தத்தில் யோகி பாபுவை பல படங்களில் காமெடியாக பார்த்த நாம் இந்த படத்தில் ஒரு சீரியசான யோகி பாபுவை பார்க்கலாம் என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

பாரதிராஜா, கெளதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு, எஸ் ஏ சந்திரசேகர், டெல்லி கணேஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் ஏகாம்பரம் ஒளிப்பதிவில் லெனின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

இமயமலையில் சுதந்திர தினம் கொண்டாடிய ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்ற நிலையில் அங்கு தனது நண்பர்கள் மற்றும்  சாமியார்களை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. ஸ்கூல் யூனிஃபார்மில் பிக்பாஸ் ஜனனி..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த ஜனனி  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கூல் யூனிபார்மில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த

'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் இந்த தேதியிலா?அதற்குள் ரூ.500 கோடியை எட்டுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் வசூல் கோலிவுட் திரையுலகினர்களை பிரமிக்க வைத்துள்ளது

முதல்வர்களை அடுத்து 'ஜெயிலர்' பார்த்த சர்வதேச தலைவர்..! வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் நான்கே நாட்களில் சுமார் 300 கோடி ரூபாய் வசூல்

'ஜெயிலர்' வெற்றியால் 'கேப்டன் மில்லர்' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது என்பதையும்