close
Choose your channels

இந்த கேஸ்ல ஜெயிச்சேன்னா நான் வேற எங்கேயோ போயிடுவேன்: 'கருமேகங்கள் கலைகின்றன' டிரைலர்..!

Monday, August 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இந்த ட்ரெய்லரின்படி பாரதிராஜா தந்தையாகவும் கௌதம் மேனன் மகனாகவும் நடித்திருக்கும் நிலையில் ஒரே வீட்டில் இருக்கும் இவர்கள் 10 வருடமாக ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருக்கிறார்கள். இவர்களுக்குள் என்ன பிரச்சனை? இறுதியில் இவர்களுக்குள் சமாதானமாகி பேசினார்களா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரியவருகின்றது.

இன்னொரு பக்கம் யோகி பாபு தனது மனைவி மற்றும் மகளை பிரிந்து இருக்கும் நிலையில் மகளை பாசத்துடன் பார்க்க வரும்போது என்ன ஏற்படுகிறது என்பதும் ஒரு கதையாக ஓடுகிறது.

மொத்தத்தில் யோகி பாபுவை பல படங்களில் காமெடியாக பார்த்த நாம் இந்த படத்தில் ஒரு சீரியசான யோகி பாபுவை பார்க்கலாம் என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

பாரதிராஜா, கெளதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு, எஸ் ஏ சந்திரசேகர், டெல்லி கணேஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் ஏகாம்பரம் ஒளிப்பதிவில் லெனின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.