விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கருணாகரன்: எதற்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,April 19 2019]

கடந்த சில மாதங்களாகவே காமெடி நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்களுக்கும் இடையே டுவிட்டரில் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்து பலர் அறிந்ததே. இதற்கு காரணம் விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது கருணாகரன் பதிவு செய்த ஒரு டுவீட்தான். அதுமுதல் விஜய் ரசிகர்கள் கருணாகரனை கடுமையான சொற்களில் தாக்க, அதற்கு கருணாகரனும் பதிலடி கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் டுவிட்டருக்கு வந்த கருணாகரன், தான் ஓட்டு போட்டுவிட்டதை புகைப்படத்துடன் தெரிவித்தார். மேலும் விஜய் குறித்து தான் பதிவு செய்த கருத்துக்கு வருந்துவதாகவும், தனது கருத்துக்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள டுவீட்டில், 'நான் பொதுவாக யாரையும் வெறுப்பதில்லை. நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத்தக்க ஒருசில வார்த்தையை நான் பயன்படுத்தியது தவறுதான். அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் மிகவும் விரும்பும் நடிகர்களில் ஒருவர் விஜய். அவருக்கும் இது தெரியும். சமூகவலைத்த்தில் நான் பயன்படுத்திய எந்தவொரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என்று கருணாகரன் கூறியுள்ளார். இத்தனை மாதம் கழித்து கருணாகரன் திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்? என்ற வியப்பு பலருக்கு ஏற்பட்டுள்ளது.

More News

Mr.லோக்கல் இடத்தை பிடித்த 'தேவராட்டம்'

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில், ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகிய 'Mr.லோக்கல்'

Mr.லோக்கல் அதிகாரபூர்வ புதிய ரிலீஸ் தேதி!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 1ஆம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது

மனைவிக்கே தெரியாமல் 47 குழந்தைக்கு தந்தையான கணவர்! எப்படி சாத்தியம்!

சில சமயங்களில், உலகில் நடக்கும் சில ஆச்சர்யமான சம்பவங்கள் நம்மை வியப்படைய செய்கிறது. இது எப்படி சாத்தியம் என்கிற கேள்வியையும் நம்மில் விதைக்கிறது...

சர்கார் படம் ஏற்படுத்திய விழிப்புணர்வு: 49P விதிப்படி வாக்களித்த வாக்காளர்: 

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்தில் 49P என்ற தேர்தல் விதிமுறை குறித்து விளக்கப்பட்டிருக்கும்.

ஜெயம் ரவியின் 25வது படம் குறித்த முக்கிய தகவல்

கடந்த 2003ஆம் ஆண்டு 'ஜெயம்' படத்தில் தமிழில் அறிமுகமான ஜெயம் ரவி 16 ஆண்டுகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது 25வது படம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.