close
Choose your channels

நடிகர் கருணாஸ் உள்பட மேலும் 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Wednesday, August 5, 2020 • தமிழ் Comments

தமிழகத்தில் ஒரு சில அமைச்சர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் அவர்களில் ஒரு சிலர் மட்டும் குணமாகி வீடு திரும்பியதாகவும் இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளது என்பதும் அதில் ஒருவர் நடிகர் கருணாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆம், நடிகரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

அதேபோல் பூம்புகாரின் எம்.எல்.ஏ பவுன்ராஜ் என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz