ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு: விஜய்சேதுபதிக்கு ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் நோட்டீஸ்

  • IndiaGlitz, [Sunday,July 16 2017]

சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு கூறி நோட்டீஸ் அனுப்புவது கடந்த சில காலமாகவே ஃபேஷனாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசனுக்கு மலையாள நடிகை விவகாரத்தில் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் நேற்று பிரபல நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் ஹீரோக்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'கருப்பன்'. விஜய் சேதுபதி, தான்யா, பாபிசிம்ஹா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. அதில் விஜய்சேதுபதி அட்டகாசமாக காளையை அடக்குவது போன்ற காட்சி இருந்தது.

இந்த நிலையில் 'கருப்பன்' படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, இயக்குனர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் காத்தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது, காளையின் பெயருக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில், கருப்பன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

அபிராமி தியேட்டரில் புதிய முயற்சி: மற்ற திரையரங்குகளும் பின்பற்றுமா?

கடந்த 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி காரணமாக திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. ரூ.120 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.150க்கும் மேல் உள்ளது.

நரமாமிச அகோரிகளால் தி.நகர் திருப்பதி கோவிலில் தீட்டா?

சென்னையின் திருப்பதி என்று அழைக்கப்படும் சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்வது வழக்கம்.

கதிராமங்கலம் மக்களுக்காக உயிரையே கொடுக்க துணிந்த டிராபிக் ராமசாமி

தஞ்சை அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோல், கேஸ் ஆகியவற்றை கடந்த பல ஆண்டுகளாக எடுத்து வருகிறது.

இனி அஞ்சலகங்களிலும் ஆதார் அட்டை. புதிய அறிவிப்பு

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

எல்லா கேள்விகளுக்கு இன்று பதில்: பிக்பாஸ் கமல் அறிவிப்பு

கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஆரம்பமாகி இன்று ஒரு மாநிலமே அந்த நிகழ்ச்சி குறித்து விவாதிக்கும் அளவுக்கு உள்ளது.