சென்ற ஆண்டு கமல்-அஜித், இந்த ஆண்டு தனுஷ்-கார்த்தி

  • IndiaGlitz, [Friday,July 29 2016]

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் அஜித்தின் 'வேதாளம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல வசூலை பெற்று வெற்றி படங்கள் என்ற பெருமையை பெற்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் 25ஆம் தேதி கார்த்தியின் 'காஷ்மோரா' வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதே தினத்தில் தனுஷின் 'கொடி' ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்பு அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் கார்த்தியின் 'சிறுத்தை' மற்றும் தனுஷின் 'ஆடுகளம்' வெளியாகி இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது போல் இந்த ஆண்டும் 'காஷ்மோரா' மற்றும் 'கொடி' ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'எதிர்நீச்சல்' மற்றும் 'காக்கிச்சட்டை' ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கிய 'கொடி' படத்தில் இருவேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் இந்த படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

ஆகஸ்ட்டில் கவுதம் மேனனின் 2 படங்கள் ரிலீஸ்

பிரபல இயக்குனர் கவுதம்மேனன், சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா'...

கபாலியுடன் கனெக்ஷன் ஆன 'விஜய் 60'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ரூ.300 கோடி வசூலை தாண்டி தற்போது ரூ.400 கோடி...

'கபாலி' சக்ஸஸ் மீட்: 6 நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில்...

40 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற தனுஷ்

தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' மற்றும் 'ஆடுகளம்' படங்களை இயக்கிய வெற்றிமாறன் 3வது முறையாக தனுஷூடன் இணைந்து இயக்கி வரும் படம் 'வடசென்னை...

மீண்டும் எம்.ராஜேஷ் படத்தில் சந்தானம். ஆனால்...

எம்.ராஜேஷ் இயக்கிய படங்களில் சந்தானம் தவறாது காமெடி வேடங்களில் நடித்து வருவது கடந்த சில வருடங்களாக நிகழ்ந்து வருகிறது...