close
Choose your channels

சென்ற ஆண்டு கமல்-அஜித், இந்த ஆண்டு தனுஷ்-கார்த்தி

Friday, July 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் அஜித்தின் 'வேதாளம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல வசூலை பெற்று வெற்றி படங்கள் என்ற பெருமையை பெற்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் 25ஆம் தேதி கார்த்தியின் 'காஷ்மோரா' வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதே தினத்தில் தனுஷின் 'கொடி' ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்பு அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் கார்த்தியின் 'சிறுத்தை' மற்றும் தனுஷின் 'ஆடுகளம்' வெளியாகி இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது போல் இந்த ஆண்டும் 'காஷ்மோரா' மற்றும் 'கொடி' ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'எதிர்நீச்சல்' மற்றும் 'காக்கிச்சட்டை' ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கிய 'கொடி' படத்தில் இருவேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் இந்த படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.