ஸ்டாலின் சாலைமறியலை கலாய்த்த கஸ்தூரி: திமுகவினர் டென்ஷன்

  • IndiaGlitz, [Thursday,June 15 2017]

நேற்று தமிழக சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்பதும் அதன் பின்னர் அனைவரும் சாலைமறியல் செய்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் தயவால் இயங்கி வரும் இந்த அரசை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக திமுக எம்.ஏ.க்கள் நேற்று நடத்திய இந்த போராட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பு மாறி மாறி தமிழக மக்களிடம் இருந்தும் அரசியல் விமர்சகர்களிடம் இருந்தும் கருத்துக்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சமூக அவலங்கள் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ஸ்டாலின் மறியல் குறித்து தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் 'ரோட்டுல மறியல். “யார் அப்பன் வீட்டு காசு" ன்னு கோஷம். எல்லாம் #பழக்கதோஷம். அடுத்தவாரிசுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கஸ்தூரியின் இந்த பதிவுக்கு திமுக தரப்பில் இருந்து பல கண்டனங்கள் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒருசில கருத்துக்கள் முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனது கருத்துக்கு கிடைத்து வரும் எதிர்ப்புகளுக்கு பின்னர் கஸ்தூரி மீண்டும் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில், 'முந்தைய டீவீட்டுக்கு மன்னிக்கவும். அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான்' என்று கூறியுள்ளார்.

More News

'பாகுபலி 2' படத்துடன் கனெக்சன் ஆனது ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஷங்கரின் பிரமாண்ட படைப்பான '2.0' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் எடிட்டிங் முற்றிலும் முடிவடைந்து விரைவில் பின்னணி இசைப்பணி தொடங்கவுள்ளது என்பதை நேற்று பார்த்தோம்...

அனிருத்தின் சர்வைவா! வைரலாகும் தல அஜித்தின் 'விவேகம்' சிங்கிள் டிராக்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் பாடல் டீசர் நள்ளிரவு 12.01க்கு வெளியாகி அஜித் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது...

யாஹூ சகாப்தம் முடிந்தது. 4.5 பில்லியனுக்கு வாங்கியது வெரிஜோன் நிறுவனம்

கடந்த பத்து வருடங்களுக்கு முன் முன்னணி சியர்ச் இஞ்சின் இணையதளமாக இருந்த யாஹூ கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது யாஹூ நிறுவனத்தை வெரிஜோன் என்ற நிறுவனம் $4.5 பில்லியன் கொடுத்து கைப்பற்றியுள்ளது

ரஜினியின் '2.0' முழு படத்தை பார்த்த முதல் இரண்டு விஐபிக்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் '2.0'.

போதை மருந்துக்கு அடிமையானவரா கிருத்திகா? தோழியின் திடுக்கிடும் தகவல்

பாலிவுட் நடிகை மற்றும் மாடலிங் கிருத்திகா நேற்று அவர் தங்கியிருந்த வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார் என்று வெளியான செய்தியை நேற்று பார்த்தோம்