அர்த்தராத்திரியில் குடை பிடித்தால் ஆரோக்யம்: பிரபல நடிகையின் டுவீட்

  • IndiaGlitz, [Wednesday,April 29 2020]

சமீபத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும் என சமீபத்தில் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் ‘அர்த்தராத்திரியில் குடைபிடித்தால் அற்பமில்லை, ஆரோக்யம் தான்’ என்று கூறியுள்ளார்.

கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து மக்கள் தப்பிக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் அரசும் அறிவுறுத்தி வரும் நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் இதுகுறித்து கூறியபோது, ‘காய்கறி மற்றும் மளிகைக்கடைக்கு வருபவர்கள் குடை கொண்டு வர வேண்டும் என்றும், குடைகள் இடிபடாமல் இருக்க ஒரு மீட்டர் இடைவெளியில் பொதுமக்கள் நின்றால் தானாகவே சமூக இடைவெளி கிடைத்துவிடும் என்றும் கூறியிருந்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியரின் இந்த ஐடியா குறித்து நடிகை கஸ்தூரி கூறியபோது, ’சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க எல்லோரும் குடை பிடிக்க வேண்டும் என்று சேலம் ஆட்சியர் கூறியது நல்ல ஐடியா என்றும் அர்த்தராத்திரியில் குடைபிடித்தால் அற்பமில்லை, ஆரோக்யம் ! புதுமொழி! என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த டுவிட்டர் பயனாளி ஒருவர் ’இது கேரளாவின் ஐடியா என்றும் கேரளாவில் ஏற்கனவே குடை கொண்டு செல்வது வழக்கமாகியுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த கஸ்தூரி, ‘யார் முதலில் செய்திருந்தாலும் மொத்தத்தில் அருமையான யோசனை, அனைவரும் பின்பற்றக்கூடிய எளிய நல்ல விஷயம். மழையும் வெயிலும் மாறி மாறி நம்மை குழப்பும் இந்த சமயத்துக்கு ஏற்ற யோசனையும் கூட என்று தெரிவித்துள்ளார்.

More News

டுவிட்டரில் இருந்து திடீரென விலகிய நடிகர் விவேக்: என்ன காரணம்?

சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருந்து மே 3ஆம் தேதி வரை விலகுவதாக நடிகர் விவேக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயார் இறந்த மூன்றே நாட்களில் காலமான பிரபல பாலிவுட் நடிகர்

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் சற்றுமுன் காலமானதாக வெளிவந்துள்ள செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு வயது 54

தமிழ் படத்தில் தான் மலையாள பெண்களை அவமதித்துள்ளார்கள்: பிரபல இயக்குனர் குற்றச்சாட்டு

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்த 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதை அடுத்து சீமான், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர்

வறுமையில் வாடிய காதல் தம்பதி: 2 மணி நேரத்தில் பணம் அனுப்பிய தளபதி விஜய்!

வறுமையில் வாடிய காதல் ஜோடி ஒன்றுக்கு இரண்டு மணி நேரத்தில் தளபதி விஜய் பணம் அனுப்பி உதவி செய்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது

கொரோனா SARS-covid-2  வைரஸ் மேலும் 11 வகைகளைக் கொண்டிருக்கிறது!!! இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!!!

கொரோனா நாவல் வைரஸ் பல புதுப்புது பரிமாணங்களையும் தன்மைகளையும் கொண்டதாக பரவிவருகிறது.