எல்லாமே பொய், தற்புகழ்ச்சி: வனிதா வீடியோ குறித்து பிக்பாஸ் நடிகை!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரையும் பிரிந்துவிட்டதாக கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார், அந்த வீடியோவில் அவர் பீட்டர் பாலை தான் இப்போதும் நேசிப்பதாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்தார்

மேலும் நான் விரும்புவது அன்பு மட்டுமே என்றும் ஆனால் அது எப்போதுமே என்னிடமிருந்து சென்று விடும் என்றும், இந்த சவாலையும் நான் எதிர் கொள்வேன் என்றும் என்னுடைய குழந்தைகளை என்னுடைய துயரங்கள் பாதிக்காமல் வளர்த்துக் கொள்வேன் என்றும் அவர் கூறியிருந்தார் மேலும் எலிசபெத் இடம் வருத்தம் தெரிவித்த அவர் அவரைப்பற்றி குறையும் சொல்லி இருந்தார்

இந்த நிலையில் ஏற்கனவே வனிதா-எலிசபெத் விவகாரம் குறித்து கருத்து கூறியிருந்த நடிகை கஸ்தூரி தற்போது இந்த வீடியோ குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தற்போது தான் இந்த வீடியோவை பார்த்தேன். நன்றாக எடிட் செய்யப்பட்டு பொருத்தமான டைட்டில் வைத்து, சொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழைப்பு என்றே புரியவில்லை. இதிலிருக்கும் அனைத்துமே பொய் மற்றும் தற்புகழ்ச்சி தான். எல்லோரும் கெட்டவர்கள், வனிதா மட்டுமே பாதிக்கப்பட்டவர் என்ற ரீதியில் வீடியோவில் உள்ள கருத்துக்கள் உள்ளன. அனைத்தும் நான் எதிர்பார்த்தது தான்

ஆனால் எலிசபெத்தை குறை சொல்வது ஏன் என்பதுதான் எனக்கு புரியவில்லை. இந்த வீடியோவில் நான்கு விளம்பர இடைவேளை வைத்து நல்ல வருமானம் பார்த்து உள்ளார் என்பது மட்டும் உண்மை’ என்று கஸ்தூரி கூறியுள்ளார்

வனிதா வீடியோ குறித்து கஸ்தூரியின் இந்த வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ்?

பிக்பாஸ் வீட்டில் நேற்றும் இன்றும் நடைபெற்று வரும் அரக்கர்கள் மற்றும் ராஜ வம்சத்தினர் டாஸ்க் விளையாட்டு வினையாவது போல் பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது

'சக்ரா' படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் புதிய நிபந்தனை!

நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வதை தடை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ரவீந்திரன்  வழக்கு ஒன்றை பதிவு செய்தார் என்பதை பார்த்தோம்.

'சூரரை போற்று' ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு: பரபரப்பு தகவல்

சூர்யா நடித்த 'சூரரை போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டு முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

நான் உயிரோடு இருப்பது பிடிக்கவில்லையா? எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்!

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விரைவில் பாஜகவில் சேர இருப்பதாக

கதறி கதறி அழும் சுரேஷ்: என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்று வரும் அரக்கர்கள் மற்றும் ராஜ வம்சத்தினர் டாஸ்க் விறுவிறுப்பாக இருக்கும்