கொரோனா வைரஸ் பீதி: கஸ்தூரி படப்பிடிப்பில் பரபரப்பு 

நடிகை கஸ்தூரி நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ஐடி நிறுவனம் திடீரென கொரொனா வைரஸ் பீதி காரணமாக மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகை கஸ்தூரி தற்போது தெலுங்கு தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஐடி பார்க் அருகே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கஸ்தூரி சமீபத்தில் இந்த தொடரின் படப்பிடிப்புக்கு சென்றபோது படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள ஐடி பார்க் திடீரென மூடப்பட்டது

அந்த ஐடி பார்க்கில் பணிபுரியும் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து ஒட்டுமொத்த ஐடி பார்க்கும் மூடப்பட்டதால் படப்பிடிப்பு குழுவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டதாக கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் வைரஸ் பாதிப்பு உள்ள இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது என்பது தெரிந்ததே

மேலும் நாளை வெளியாக உள்ள வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’ என்ற திரைப்படத்தில் கஸ்தூரி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் விஜய் ஆண்டனியின் ’தமிழரசன்’ படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

பா ரஞ்சித்-ஆர்யா படத்தில் வில்லனாகும் தமிழ் பட ஹீரோ

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

வெற்றிமாறனின் அடுத்த பட கதை இதுதான்

இயக்குனர் வெற்றிமாறன் நாவல்களை அடிப்படையாக வைத்து திரைப்படம் எடுப்பவர் என்பது அனைவரும் தெரிந்ததே. மு.சந்திரகுமார் எழுதிய லாக்கப்' என்ற நாவலை 'விசாரணை'

சகலகலா வல்லவனாகும் சந்தானம்: ஆச்சரிய தகவல் 

சந்தானம் நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பிஸ்கோத்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்

தென்னிந்திய ஹீரோவுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே: பரபரப்பு தகவல் 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தீபிகா படுகோனே ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

வரலாற்றிலேயே முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள் ஒன்றாக அமர்ந்து விசாரணை 

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக 3