close
Choose your channels

மீண்டும் இணையும் “காவல்துறை உங்கள் நண்பன்” டீம்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

Tuesday, September 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் சார்பில் பாஸ்கரன் , ராஜபாண்டியன் இணைந்து தயாரித்து சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் இனிதே துவங்கியது !!

பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் வித்தியாசமாக புதிய காமெடி டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியுள்ளது. கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது.

முன்னதாக பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில், நடிகர் சுரேஷ் ரவி நடித்த “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சக ரீதியாக தரமான திரைப்படம் பெரும் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் தற்போது இதே தயாரிப்பு நிறுவனமும் நடிகர் சுரேஷ் ரவியும் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்து காட்டும் வகையில், சுரேஷ் ரவி, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் கலக்கலான காமெடி டிராமாவாக இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தினை இயக்குநர் கே பாலையா எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
,
இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபா பாலு பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி ஆதித்யா கதிர் அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ரகுநந்தன் இசையில், கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் தினேஷ் போனுராஜ் படத்தொகுப்பில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment