கவின் - சந்தானம் படங்கள் ஒரே நாளில் மோதல்.. யாருக்கு வெற்றி கிடைக்கும்?

  • IndiaGlitz, [Saturday,April 20 2024]

தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்து விட்டதால் பெரிய ஸ்டார்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். விஷாலின் ‘ரத்னம்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் அதனை அடுத்து சுந்தர் சியின் ’அரண்மனை 4’, கவின் நடித்த ‘ஸ்டார்’ உட்பட சில படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சந்தானம் நடித்த ’இங்க நாங்க தான் கிங்’ என்ற திரைப்படம் மே 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

சந்தானம் ஜோடியாக பிரியாலயா நடித்திருக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், சேஷு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா பலர் நடித்துள்ளனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், டி இமான் இசையில், ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் ,தியாகராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

சந்தானம் நடித்த ’இங்க நாங்க தான் கிங்’ படம் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் தான் கவின் நடித்த ’ஸ்டார்’ திரைப்படமும் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. மே 10ஆம் தேதி கவின் மற்றும் சந்தானம் ஆகிய இருவரது படங்களில் வெற்றி பெறும் படம் எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'அவ்வை சண்முகி' தோத்துவிடும் போல.. அசல் பெண்ணாக மாறிய கவின்.. வைரல் வீடியோ..!

கவின் நடித்து முடித்துள்ள 'ஸ்டார்' திரைப்படம் மே 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆன்மீக பயணம்: சென்னையில் உள்ள தாத்தா சாமி கோவிலின் அதிசயங்கள்

சென்னைவாசிகளுக்கு மிகவும் பிரபலமான மற்றும் பக்தர்களால் வணங்கப்படும் தலங்களில் ஒன்று, பழைய வண்ணார பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீமத் வேங்கட சுப்பானந்த ஜீவ சமாதி சித்தர் பீடம்,

'தலைவர் 171' படத்தில் இந்த பிரபல நடிகரும் இணைகிறாரா? சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' திரைப்படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம்

பகல் இரவானது.. பொருட்கள் தூக்கி வீசப்பட்டன.. துபாய் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் நடிகையின் பதிவு..!

சமீபத்தில் துபாயில் வரலாறு காணாத கனமழை பெய்ததை அடுத்து நாடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது என்பதும் பல குடியிருப்புகளில் தண்ணீர் புகுத்ததால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்பட்டனர் என்ற

சினிமாவுக்கு போகிறார் 'சிறகடிக்க ஆசை' நடிகர்.. திவ்யா துரைசாமி தான் ஜோடியா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் மனோஜ் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீதேவாவுக்கு