close
Choose your channels

கவின் - சந்தானம் படங்கள் ஒரே நாளில் மோதல்.. யாருக்கு வெற்றி கிடைக்கும்?

Saturday, April 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்து விட்டதால் பெரிய ஸ்டார்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். விஷாலின் ‘ரத்னம்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் அதனை அடுத்து சுந்தர் சியின் ’அரண்மனை 4’, கவின் நடித்த ‘ஸ்டார்’ உட்பட சில படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சந்தானம் நடித்த ’இங்க நாங்க தான் கிங்’ என்ற திரைப்படம் மே 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

சந்தானம் ஜோடியாக பிரியாலயா நடித்திருக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், சேஷு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா பலர் நடித்துள்ளனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், டி இமான் இசையில், ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் ,தியாகராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

சந்தானம் நடித்த ’இங்க நாங்க தான் கிங்’ படம் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் தான் கவின் நடித்த ’ஸ்டார்’ திரைப்படமும் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. மே 10ஆம் தேதி கவின் மற்றும் சந்தானம் ஆகிய இருவரது படங்களில் வெற்றி பெறும் படம் எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos