சம்யூக்தாவிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்: முடிவுக்கு வந்தது பூங்கா விவகாரம்

  • IndiaGlitz, [Monday,September 07 2020]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரு பூங்காவில் நடிகை சம்யுக்தா ஹெக்டே ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்ததாகவும், அவர் அதிக சத்தத்துடன் பாடலை போட்டு கொண்டே உடற்பயிற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது

இதனை அங்கிருந்த காங்கிரஸ் பிரமுகர் கவிதா ரெட்டி கண்டித்ததாகவும், இதனை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததாகவும் செய்திகள் வெளியானது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கவிதா ரெட்டி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது கவிதா ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் சம்யுக்தா ஹெக்டேவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்

இது எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம் என்றும் இதற்காக தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கவிதா ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்தார். கவிதா ரெட்டியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாக டுவிட்டர் பக்கத்தில் சம்யுக்தா ஹெக்டேவும் பதிவு செய்திருப்பதால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது

More News

உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தகுதி இழப்பு: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அதிர்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காதலருடன் மீண்டும் சண்டையா? ப்ரியா பவானிசங்கரின் இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பு

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானிசங்கர்,

கொரோனா பாதித்த இளம் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் நடந்த கொடூரம்!!!

கேரளாவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவரே கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐஏஎஸ் அதிகாரிகள் கெடுபிடி தாங்கல... வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் அரசு மருத்துவர்!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு சொந்த ஊரில் ஆட்டோ ஒட்டி பிழைப்பு நடத்தத் தொடங்கியிருக்கிறார்.

ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நடக்கும் தேதிகள்!

2020ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டி வரும் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய் அரபு எமிரேட் நாட்டில் நடைபெறவிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் இந்த போட்டிகளின் அட்டவணை வெளியாகியது