மெஸ்ஸியின் ஜெர்ஸியுடன் போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Monday,August 09 2021]

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக கடந்த 21 ஆண்டுகளாக விளையாடிய நிலையில் சமீபத்தில் ஒப்பந்தம் பதிப்பிக்கப்படாததால் பார்சிலோனா அணியில் இருந்து விலகினார் என்பது தெரிந்ததே. மேலும் நேற்று அவர் பார்சிலோனாவில் இருந்து ரசிகர்களிடம் மற்றும் அணி வீரர்களிடம் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற வீடியோ வைரல் ஆனது என்பது குறிப்பிடதக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வரும் மெஸ்ஸி குறித்து தமிழ் திரையுலகினர் சிலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்தநிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் , மெஸ்ஸியின் ஜெர்ஸியை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மெர்சிக்கு தலை வணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆன நிலையில் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘சாணிக்காகிதம்’ ஆகிய திரைப்படங்களிலும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தங்கம் வென்ற ஒரே நாளில் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்த ஆச்சரியம்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்ற கொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் நெருங்கி உள்ளது பெரும்

சென்னை ரெங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் தடை தொடர்கிறதா?

சென்னை ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் சென்னை மாநகராட்சித் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருவதை அடுத்து தடை மேலும் தொடருமா? அல்லது கடைகள் திறக்கப்படுமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம் 

தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா.....!சொகுசு கார் முதல் கோடிகளில் குவியும் ரொக்கம் வரை ...!

23 வயது நிரம்பிய நீரஜ்  சோப்ரா பங்குபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி இதுதான். டோக்கியோ-வில்

மாடலிங் செய்யும் 99 வயது பாட்டி? நெட்டிசன்ஸ் வியக்கும் அசத்தலான புகைப்படம்!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 99 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய பேத்தியின் பிசினஸ்க்காக மாடலிங் செய்ய துவங்கி இருக்கிறார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த அமெரிக்கா… இந்தியா பெற்ற இடம்…!

32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கடந்த ஜுலை 23 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வந்தது