என்ன ஒரு அருமையான வாய்ஸ்: கீர்த்தி சுரேஷ் பாட்டு பாடும் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Friday,July 22 2022]

தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் குறிப்பாக தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா, தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதியின் ‘மாமன்னன்’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘வாஷி’ என்ற மலையாளத் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘வாஷி’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலின் சில வரிகளை பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் பாடலை கேட்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அருமையாக பாடுவார் என்று எங்களுக்கு தெரியாது என்று ஒரு தொழில்முறை பாடகி போல் மிக சிறப்பாக பாடியுள்ளார் என்றும், என்ன ஒரு அருமையான வாய்ஸ் என்று பல ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ராதிகா சரத்குமார் உள்பட 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வேணவே வேணாம்: 'குக் வித் கோமாளி' சீசன் 3  ஃபைனலிஸ்ட் வீடியோ வைரல்!

பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தால் போக மாட்டேன் என்றும் அந்த நிகழ்ச்சி வேண்டவே வேண்டாம் என்றும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட்  வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

சிம்புவுக்கு திருமணம் எப்போது? சென்னை திரும்பிய ராஜேந்தர் பேட்டி!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் என்பதை பார்த்தோம்.

'என்னை கடலுக்கு கூட்டிட்டு போறியா? கிருத்திகா உதயநிதியின் 'பேப்பர் ராக்கெட்' டிரைலர்

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கிய 'பேப்பர் ராக்கெட்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

உண்மையிலேயே அவரை மிஸ் செய்கிறேன்: குஷ்புவின் நெகிழ்ச்சியான டுவிட்!

உண்மையிலேயே அவரை மிஸ் செய்கிறேன் என மறைந்த பிரபல நடிகர் குறித்து நடிகை குஷ்பு பதிவு செய்து உள்ளார் 

சிம்புவை திருமணம் செய்ய தர்ணா செய்த நடிகை: திடீரென 'அண்ணா' என அழைத்ததால் பரபரப்பு

சிம்புவை தான் திருமணம் செய்வேன் என்றும் நானும் அவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் என்றும் கூறிய நடிகை ஒருவர் திடீரென சிம்புவை 'அண்ணா' என்று அழைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.