close
Choose your channels

என்ன ஒரு அருமையான வாய்ஸ்: கீர்த்தி சுரேஷ் பாட்டு பாடும் வீடியோ வைரல்!

Friday, July 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் குறிப்பாக தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா, தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதியின் ‘மாமன்னன்’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘வாஷி’ என்ற மலையாளத் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘வாஷி’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலின் சில வரிகளை பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் பாடலை கேட்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அருமையாக பாடுவார் என்று எங்களுக்கு தெரியாது என்று ஒரு தொழில்முறை பாடகி போல் மிக சிறப்பாக பாடியுள்ளார் என்றும், என்ன ஒரு அருமையான வாய்ஸ் என்று பல ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ராதிகா சரத்குமார் உள்பட 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.