close
Choose your channels

உதயநிதிக்கு சிறப்பு விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ்: வைரல் புகைப்படங்கள்!

Friday, September 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்து வைத்த புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவாகியுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நேற்று கேரளாவில் மிகச்சிறப்பாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டதை அடுத்து ஓணம் பண்டிகை கொண்டாட்டம் குறித்து புகைப்படங்களை கேரளாவை சொந்த மாநிலமாக சேர்ந்த திரை நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடாமல் உதயநிதி நடித்து வரும் ’மாமன்னன்’ படக்குழுவினரிடம் கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வைகைப்புயல் வடிவேலு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே கீர்த்தி சுரேஷ், உதயநிதி, மாரி செல்வராஜ் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் ஓணம் பண்டிகையை ஒட்டி சிறப்பு விருந்து வைத்தார். இந்த விருந்து குறித்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment