சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் கீர்த்திசுரேஷ்

  • IndiaGlitz, [Sunday,June 03 2018]

 

சமீபத்தில் வெளியான 'நடிகையர் திலகம்' படத்தின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் கீர்த்திசுரேஷ். நடிகையர் திலகம் சாவித்திரியை அப்படியே கண்முன் கொண்டு வந்த கீர்த்திசுரேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயனுடன் 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' படங்களில் நடித்த கீர்த்திசுரேஷ், தற்போது அவர் நடித்து வரும் 'சீமராஜா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சமந்தா நாயகி என்பதும், சமந்தாவுடன் ஏற்கனவே 'நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புர்டொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்குக் டி.இமான் இசையமைத்துள்ளார். பொன்ராம் இயக்கியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிக எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்று ஆகும்

More News

தளபதியின் 'மெர்சல்' செய்த மேலும் ஒரு சாதனை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை உலகம் முழுவதும் அடைந்தது என்பது தெரிந்ததே

த்ரிஷாவை பாராட்டிய மக்கள் செல்வன்

கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, முதல்முறையாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் '96' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் தளபதி விஜய்யின் 'போக்கிரி' ஆட்டம் ஆரம்பம்

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'போக்கிரி.

சின்னத்திரை இயக்குனரின் 'செயலி' ஆரம்பம்

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் ராஜ்குமார்.

வெளிநாட்டிலும் 'காலா' ரிலீசுக்கு சிக்கல்? அதிர்ச்சியில் படக்குழுவினர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்பட ரிலீஸ் தேதியின் கவுண்டிங் ஆரம்பமாகிவிட்ட நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.