பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்?

  • IndiaGlitz, [Saturday,May 07 2022]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர்சி 15’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் ராம் சரண் தேஜா இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் இந்த படத்தில் கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று வெளியாக ‘சாணிக்காகிதம்’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் அதேபோல் அடுத்த வாரம் வெளியாக உள்ள மகேஷ்பாபுவின் ’சர்காரு வாரு பாட்டா’ என்ற திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஷங்கர் ’ஆர்.சி. 15’ படத்தில் என்ன கேரக்டரை கொடுத்திருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு: 'ஐங்கரன்' ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்!

ஜிவி பிரகாஷ் நடிப்பில், ரவி அரசு இயக்கத்தில் உருவான 'ஐங்கரன்' திரைப்படம் நேற்று அதாவது மே 6ஆம் தேதி ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி தள்ளி

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு: வைரல் புகைப்படங்கள்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா-ரியாஸ் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

தெலுங்கில் ரீமேக் ஆகும் தம்பி ராமையா படத்தில் பவன் கல்யாண்?

தம்பி ராமையா முக்கிய கேரக்டரில் நடித்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

சதீஷின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்களா? வைரல் புகைப்படங்கள்!

 நடிகர் சதீஷ் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை நடந்துள்ள நிலையில் இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

'கேஜிஎப் 2' படத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 'கேஜிஎப்' மற்றும் 'கேஜிஎஃப் 2' படங்களில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் இன்று மரணமாகி உள்ளதை அடுத்து படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .