எஸ்பிபி பெயரில் தேசிய விருது: பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் அவருடன் பழகிய நினைவலைகளை பல திரையுலக பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளர், இயக்குனர் கேயார், எஸ்பிபி குறித்து கூறியதோடு, அவரது பெயரில் தேசிய விருது வழங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

எஸ்பிபியின் மறைவைக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவருடைய மறைவு என்னைப் பாதித்துள்ளது. எஸ்பிபி சாருடைய மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக எஸ்பிபி இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்ம பூஷண் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார்.

எஸ்பிபியின் சாதனையைப் போற்றும் விதமாகச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அப்படி வழங்கினால் எஸ்பிபியின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும்கூட.

இவ்வாறு தயாரிப்பாளர் கேயார் தெரிவித்துள்ளார்

More News

மீண்டும் கணவருடன் சமாதானமான பூனம் பாண்டே: என்னதான் நடக்குது?

பிரபல நடிகை பூனம் பாண்டே தனது நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை செப்டம்பர் 10ஆம்  திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமான ஒரே நாளில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

எஸ்பிபி பாடலை பாடச் சொல்லி விஜய்யை நச்சரித்த வனிதா!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு குறித்து ஒட்டுமொத்த திரையுலக பிரமுகர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருவதோடு அவரோடு பழகிய நாட்களையும் பகிர்ந்து வருகின்றனர் 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்சேதுபதியுடன் 7 படங்களில் நடித்த நடிகை!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க முயற்சிப்பேன்: பிரபல இசையமைப்பாளர்!

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் என பிரபல இசை அமைப்பாளரும், பாரத ரத்னா விருது குழுவில் இருக்கும் உறுப்பினர்களில் ஒருவருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார் 

நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் ஒருவர்: கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்று புகழக்கூடிய பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த நாளை இன்று திரையுலகம் கொண்டாடி வருகிறது