close
Choose your channels

தயவுசெய்து இதை மட்டும் செய்யுங்கள்: 'லியோ' இயக்குனருக்கு கேரள விஜய் ரசிகர் கடிதம்..!

Sunday, April 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவை சேர்ந்த தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜ்-க்கு எழுதிய கடிதத்தில் கேரளாவில் விஜய்யுடன் கூடிய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை நடத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் அவரது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது கேரளாவிலும் வசூலை அள்ளும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.அந்த கோரிக்கையில் ‘லியோ’ திரைப்படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் புரமோஷன் நிகழ்ச்சியை கேரளாவில் நடத்தும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் அந்த கடிதத்தில் ’விஜய் ஒரு பிசியான நடிகர் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் ‘லியோ’ ரிலீசுக்கு முன்னதாக கேரளாவில் ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கேரளாவில் உள்ள அவரது ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்றும் விஜய் தனது கேரளா ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று ஒரு ரசிகனாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் விஜய் நேரடியாக வந்து ‘லியோ’ படத்தை புரமோஷன் செய்தால் அந்த படம் கேரளாவில் ஒரு மேஜிக்கை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் இந்த கடிதத்தை கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதை நீங்கள் செய்வீர்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சமீபத்தில் ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் நாடு முழுவதும் சென்று புரமோஷன் செய்த நிலையில் அதேபோல் கேரளா உள்பட நாடு முழுவதும் ‘லியோ’ படத்தையும் விஜய் புரமோஷன் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.