இரண்டு முறை திருமணம் செய்த கோடீஸ்வரர் மகள்: திடீரென மர்ம மரணம்!

  • IndiaGlitz, [Tuesday,August 18 2020]

கோடீஸ்வரர் ஒருவரின் மகள் இரண்டு முறை திருமணம் செய்ததாகவும் அதன்பின்னர் திடீரென அவர் சில காலம் மாயமாகி, மீண்டும் சொந்த ஊர் வந்து லாட்ஜ் அறை ஒன்றில் தங்கிய நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் உள்ள கன்னூர் என்ற பகுதியை சேர்ந்தவர் அகிலா என்ற இளம்பெண், அந்த பகுதியில் உள்ள கோடீஸ்வரர் ஒருவரின் மகள் என்றும் ஏராளமான சொத்துக்கு சொந்தக்காரர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அகிலா, ஒருவரை காதல் திருமணம் செய்தார். ஆனால் ஒரு சில மாதங்களில் அவரை விட்டுப் பிரிந்து விவகாரத்து செய்துவிட்டார்.

அதன்பின் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரை திருமணம் செய்து மூன்றே மாதத்தில் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று விட்டார். இந்த நிலையில் திடீரென 30 லட்ச ரூபாய் நோக்கம், 40 சவரன் தங்க நகைகளுடன் அகிலா மாயமானார். அவர் எங்கே சென்றார்? என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் சொந்த ஊர் வந்த அகிலா, அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். அவர் தனது உறவினர்களை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென லாட்ஜ் அறையில் மர்மமான முறையில் அகிலா மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த நான்கு வருடங்களாக கையில் லட்சக்கணக்கில் பணம் நகைகளுடன் எங்கே சென்றார்? யார் யாரை சந்தித்தார்? என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. மேலும் லாட்ஜில் அகிலா அறை எடுத்து தங்கிய போது அவர் கையில் சுத்தமாக பணம் இல்லை என்றும் நகைகளும் இல்லை என்றும் சோர்வாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் அகிலாவின் உறவினர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

அடங்காத கொரோனாவால் பொதுத்தேர்தலை தள்ளிவைத்த அதிபர்!!!

நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களுக்கு மேல் புதிய கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில் உலகளவில் நியூசிலாந்தை பற்றிய செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கொரோனா காலத்தில் தமிழக ரேஷன் கடைகளில் இலவச கோதுமை!!! பாதிப்பைக் குறைக்க சிறப்புத் திட்டங்கள்!!!

கொரோனா ஊரடங்கினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 5 மாதங்களாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது

ஒருநாள் முழுக்க, ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்க்கிய பரபரப்பு சம்பவம்!!!

இலங்கையின் முக்கிய மின்சார வழித்தடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் நேற்று ஒட்டுமொத்த இலங்கையும் இருளில் மூழ்கியிருந்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கா பாலு? எஸ்பிபி குறித்த மலரும் நினைவுகளை பகிந்த பழம்பெரும் நடிகர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்காக பிரார்த்தனை

அடல்ட் காமெடி படத்தில் அறிமுகமாகும் டிக்டாக் பிரபலம்!

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் பலர் சினிமாவில் நுழைந்து கொண்டிருக்கும் நிலையில் டிக்டாக் செயலியில் பிரபலமான இலக்கியா, தற்போது திரைப்படமொன்றில் நாயகியாக நடித்து வருகிறார்.