WWE வீரர்களுடன் நடித்த கார்த்தி.. எந்த படத்திற்காக தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,September 08 2023]

நடிகர் கார்த்திக் நடித்த 'ஜப்பான்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்து வருகிறார் என்றும் இந்த படத்திற்கு ’வா வாத்தியாரே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கார்த்தியுடன் இரண்டு WWE வீரர்கள் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. கெவின் மற்றும் சமி ஜென் (Kevin, Sami Zayn) ஆகிய இரண்டு WWE வீரர்களுடன் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பர படத்தில் கார்த்தி நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த விளம்பர படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு WWE வீரர்களுடன் இணையத்தில் கசிந்த கார்த்தியின் இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

More News

ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தில் 15 வருடங்களுக்கு பின் இணைந்த ஜோடி..!

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாகிய 'இறைவன்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்

2 பாலிவுட் 'கான்' நடிகர்கள்.. பிரசாத்-பிரபுதேவா.. வேற லெவலில் உருவாகும் 'தளபதி 68'

பாலிவுட் திரையுலகின் 2 முன்னணி 'கான்' நடிகர்கள் மற்றும் பிரசாந்த், பிரபுதேவா என 'தளபதி 68' படத்தின் நட்சத்திரங்கள் தேர்வு வேற லெவலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகனின் முகத்தை முதல்முறையாக காட்டிய அட்லி.. க்யூட் புகைப்படம் வைரல்..!

இயக்குனர் அட்லி தனது மகனின் முகத்தை முதன்முதலாக காட்டும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிக்கு மட்டுமல்ல.. 'ஜெயிலர்' லாபத்தை மருத்துவ துறைக்கும் பகிர்ந்த சன் பிக்சர்ஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழ் திரையுலகில் வசூல் சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்.

இசைஞானி இசையில், ஸ்வேதா மேனன் குரலில் உருக வைக்கும் பாடல்.. 'ஆர் யூ ஓகே பேபி' சிங்கிள்..!

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'ஆர் யு ஓகே பேபி'.  இந்த படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில்