'கேஜிஎப் 2' படத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

’கேஜிஎப்’ மற்றும் ’கேஜிஎஃப் 2’ படங்களில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் இன்று மரணமாகி உள்ளதை அடுத்து படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் மோகன் ஜூனேஜா என்பவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 54. கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் இன்று அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேஜிஎப் திரைப்படத்தில் ராக்கி பாய் பெருமைகளைப் பேசும் கதாபாத்திரமாகவும் பத்திரிகையாளர்களிடம் ராக்கிபாய் கதையை சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மோகன் ஜூனேஜா, கேஜிஎப் மட்டுமின்றி பல கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய மறைவு கன்னட திரை உலகில் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. மறைந்த நடிகர் மோகன் ஜூனேஜா இறுதிச்சடங்கு இன்று அவருடைய சொந்த ஊரில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது .

ஒரு பக்கம் 'கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் அந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர் மோகன் ஜூனேஜா மறைந்தது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு: 12 நிமிட வீடியோ வைரல்!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதிஜா - ரியா ஷேக் முகமது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது

கோடை வெயிலால் கிளாமருக்கு மாறிய காஜல் அகர்வால்: வைரல் புகைப்படம்

கோடை வெயில் காரணமாக கிளாமருக்கு மாறிய காஜல் அகர்வாலின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண தேதி இதுவா? எங்கே நடக்கப்போகுது தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

இனி யூ டியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கட்டணம் வசூலிப்பேன்: பிரபல தயாரிப்பாளர்

 பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இனி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க பணம் வாங்குவேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் சினிமாவில் இரண்டு டான்கள், ஒன்று சிவகார்த்திகேயன், இன்னொன்று...: உதயநிதி

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உதயநிதி கலந்து கொண்டார். அவர் பேசியபோது