close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு: 12 நிமிட வீடியோ வைரல்!

Saturday, May 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதிஜா - ரியா ஷேக் முகமது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 12 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புதுமண தம்பதிகளுக்கு பரிசுகள் கொடுத்து வாழ்த்து கூறும் காட்சிகளும், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்த காட்சிகளும் உள்ளன.

இந்த வீடியோ பதிவு செய்து ஒருசில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் இந்த வீடியோவை சுமார் நான்கு லட்சம் பேர்கள் பார்த்துள்ளனர் என்பதும் பலர் சமூக வலைத்தளத்தின் மூலம் கதிஜா - ரியா ஷேக் முகமது தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.