ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த 'கேஜிஎஃப் 2' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’கேஜிஎப் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவரும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ’கேஜிஎப் 2’ படத்தில் நாயகன் யாஷ் உடன் படம் முழுவதும் ட்ராவல் செய்யும் கேரக்டரில் நடித்தவர் நடிகர் ஹர்ஷ் ராய். இவர் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட ஹரிஷ் ராய், தற்போது குணமாகி வருகிறார் என்பதும் அவர் முழுவதுமாக குணமாகிவுடன் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஹரிஷ்ராய், ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் ஆகிய இருவருடன் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார்.

More News

'வெந்து தணிந்தது காடு' வெற்றி: சிம்பு, கவுதம் மேனனுக்கு சிறப்பு பரிசு கொடுத்த ஐசரி கணேஷ்!

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவான 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது

கூல் சுரேஷ் நடிக்கும் படத்தின் டைட்டிலே 'சிம்பு'வா? வைரல் போஸ்டர்!

பிரபல நடிகர்களின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்து விமர்சனம் செய்யும் கூல் சுரேஷ் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளதை அடுத்து அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

2022ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு: 'நானே வருவேன்' படத்தின் முதல் விமர்சனம்!

'நானே வருவேன்' திரைப்படம் குறித்த முதல் விமர்சனத்தை வெளியிட்ட ஒருவர் 2022ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'பொன்னியின் செல்வன்' படத்தின் பிரபு கேரக்டர்: வேற லெவலில் வைரல்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகர்: வேற லெவல் திட்டம்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.