close
Choose your channels

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த 'கேஜிஎஃப் 2' நடிகர்!

Sunday, September 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’கேஜிஎப் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவரும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ’கேஜிஎப் 2’ படத்தில் நாயகன் யாஷ் உடன் படம் முழுவதும் ட்ராவல் செய்யும் கேரக்டரில் நடித்தவர் நடிகர் ஹர்ஷ் ராய். இவர் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட ஹரிஷ் ராய், தற்போது குணமாகி வருகிறார் என்பதும் அவர் முழுவதுமாக குணமாகிவுடன் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஹரிஷ்ராய், ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் ஆகிய இருவருடன் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment