சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் குஷ்பு

  • IndiaGlitz, [Monday,October 24 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலை குறித்து அறிய டெல்லி தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை அப்பல்லோ சென்று அங்குள்ள மருத்துவர்களிடமும், அமைச்சர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு இன்று அப்பல்லோ மருத்துவமனை சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 'முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வர் விரைவில் பூரண குணமடைந்து, வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும்' என்று கூறினார்.

More News

மாஸ் நடிகரின் படங்களுக்கு இணையாக வெளியாகும் 'காஷ்மோரா'

முதன்முதலாக கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த படம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா...

சிவகார்த்திகேயனின் 'ரெமோ'. சென்னை வசூல் நிலவரம்

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியான 'ரெமோ' உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில் கடந்த வார இறுதி நாட்களின் சென்னை வசூல் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.

படிப்படியாக முன்னேறும் 'தேவி'யின் வசூல்

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்ற நிலையில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் இந்த படத்தின் வசூலும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இணையதளத்தில் நடிகர் சங்க கணக்குகள். விஷால்

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்று ஒரு வருடம் முடிந்த நிலையில் நேற்று உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது

பிறந்த நாள் விழா குறித்து கமல் எடுத்த அதிரடி முடிவு

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7ஆம் தேதி அவரது நற்பணி இயக்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.