close
Choose your channels

மாஸ் நடிகரின் படங்களுக்கு இணையாக வெளியாகும் 'காஷ்மோரா'

Monday, October 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதன்முதலாக கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த படம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அரசியாக நடித்த படம், 'பாகுபலி'க்கு பின்னர் வரும் பிரமாண்டமான சரித்திர பின்னணி கொண்ட படம் போன்ற பெருமைகளை பெற்ற 'காஷ்மோரா' வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் 1700 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த எண்ணிக்கை சமீபத்தில் வெளியான மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியான திரையரங்குகளின் எண்ணிக்கைக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மாபெரும் வரவேற்பு பெற்றதில் இருந்தே இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ்நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.