'ஒருத்தனை வேட்டையாட இவ்வளவு நேரமாடா? கலைப்புலி எஸ் தாணுவின் 'கிச்சா 46' புரமோ வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,July 02 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் அடுத்த தயாரிப்பு திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இரண்டு நிமிடத்துக்கு மேலே இருக்கும் இந்த ப்ரோமோ வீடியோவில் கிச்சா சுதீப்பின் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்பதும் இந்த படம் நிச்சயம் ஆக்ஷன் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிச்சா சுதீப்பின் 46வது படமாக உருவாகும் இந்த படம் தமிழ் கன்னடம் உட்பட தென்னிந்திய மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையில் சேகர் சந்திரா ஒளிப்பதிவில் கணேஷ் பாபு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இன்று வெளியாகியுள்ள புரமோ வீடியோவின் இறுதியில், ‘எனக்கு யுத்தத்தையும் பிடிக்காது, யுத்தத்தை உருவாக்குபவனையும் பிடிக்காது, யுத்தத்திற்கு பயந்து ஓடறவனையும் பிடிக்காது, களத்துல இறங்கி எதிரிகளை அடிச்சு கிழிச்சு ரத்தம் தெறிக்க ஓட விட்றவன் நான்.. எவனும் ஈவு, இரக்கம், பரிவு எதையும் என்கிட்ட எதிர்பார்க்காதீங்க.. என்ற கிச்சாவின் வசனம் தெறிக்க வைக்கும் அளவில் உள்ளது.

More News

பிரபாஸின் 'புரொஜக்ட் கே' படமும் புராணப்படமா? அப்படியெனில் கமலுக்கு என்ன வேடம்?

பிரபாஸ் நடிக்க இருக்கும் 'புரொஜக்ட் கே' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் பிரபாஸ் உடன் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகும் அனுஷ்காவின் படம்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை ஆக இருந்த அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான 'சைலன்ஸ்' என்ற திரைப்படத்திற்கு பிறகு தற்போது மூன்று ஆண்டுகளுக்கு அவர்

திடீரென ஹன்சிகாவாக மாறிய யோகிபாபு.. ஆதியின் 'பார்ட்னர்' டிரைலர்..!

ஆதி, ஹன்சிகா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள 'பார்ட்னர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில்

மைக் மோகனின் 'ஹரா': குஷ்புவை அடுத்து இணைந்த பிக்பாஸ் நடிகை..!

 சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் கடந்த 80களில் தொடர்ச்சியாக பல வெள்ளிவிழா திரைப்படங்களை கொடுத்தவர் என்பதை தெரிந்ததே. நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மோகன் நடித்து வரும் 'ஹரா' என்ற

'அந்த பொண்ணை எப்படி எங்க குடும்பத்துல சேர்க்க முடியும்? 'ஆர் யூ ஓகே பேபி' டீசர்..!

 லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர் யூ ஓகே பேபி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில்