close
Choose your channels

'ஒருத்தனை வேட்டையாட இவ்வளவு நேரமாடா? கலைப்புலி எஸ் தாணுவின் 'கிச்சா 46' புரமோ வீடியோ..!

Sunday, July 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் அடுத்த தயாரிப்பு திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இரண்டு நிமிடத்துக்கு மேலே இருக்கும் இந்த ப்ரோமோ வீடியோவில் கிச்சா சுதீப்பின் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்பதும் இந்த படம் நிச்சயம் ஆக்ஷன் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிச்சா சுதீப்பின் 46வது படமாக உருவாகும் இந்த படம் தமிழ் கன்னடம் உட்பட தென்னிந்திய மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையில் சேகர் சந்திரா ஒளிப்பதிவில் கணேஷ் பாபு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இன்று வெளியாகியுள்ள புரமோ வீடியோவின் இறுதியில், ‘எனக்கு யுத்தத்தையும் பிடிக்காது, யுத்தத்தை உருவாக்குபவனையும் பிடிக்காது, யுத்தத்திற்கு பயந்து ஓடறவனையும் பிடிக்காது, களத்துல இறங்கி எதிரிகளை அடிச்சு கிழிச்சு ரத்தம் தெறிக்க ஓட விட்றவன் நான்.. எவனும் ஈவு, இரக்கம், பரிவு எதையும் என்கிட்ட எதிர்பார்க்காதீங்க.. என்ற கிச்சாவின் வசனம் தெறிக்க வைக்கும் அளவில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.