'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,June 17 2022]

’கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக் ரிலீஸ் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான ’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்து கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது.

தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தில் நயன்தாராவின் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தை லைக்கா நிறுவனமே தயாரித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 29 ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினிகாந்த் - ஏவிஎம் சரவணன் திடீர் சந்திப்பு: 'சிவாஜி 2' உருவாகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ஏவிஎம் சரவணன் தனது குடும்பத்தினருடன் சென்று பார்த்ததை அடுத்து 'சிவாஜி 2' உருவாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கமல் என்ன கொடுத்தார்? அனிருத்தை அடுத்து விஜய்சேதுபதி கூறிய பதில் இதுதான்!

 உலகநாயகன் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தின் வெற்றிக்காக உங்களுக்கு என்ன கொடுத்தார் என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது. 

சாய்பல்லவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏ!

சமீபத்தில் சாய்பல்லவி தெரிவித்த ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாய்பல்லவிக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

திருமணத்திற்கு பின் விக்னேஷ் சிவன் நண்பருக்கு தெரிவித்த முதல் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 169' படத்தின் டைட்டில் 'ஜெயிலர்' என இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் தலைவரோட

தனுஷின் 'வாத்தி' படத்தின் மாஸ் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

தனுஷ் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி' . இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார் என்பதும் சாய் குமார்