close
Choose your channels

'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, June 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக் ரிலீஸ் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான ’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்து கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது.

தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தில் நயன்தாராவின் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தை லைக்கா நிறுவனமே தயாரித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 29 ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.