சென்னையில் பெண் மருத்துவரை அடுத்து ஆண் மருத்துவருக்கும் கொரோனா: பெரும் பரபரப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சற்றுமுன் வெளியான தகவலை அடுத்து, அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், ஊழியர்கள் ஆகியோர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கின்றதா? என்பதை சோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பெண் மருத்துவரை அடுத்து ஆண் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அந்த அரசு மருத்துவமனையில் இவரிடம் தொடர்பில் இருந்த மருத்துவ ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்ற நிலையில் தற்போது சென்னையில் அடுத்தடுத்து இரு மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

ரூ. 3 கோடியை அடுத்து ராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பு நிதியாக நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி சமீபத்தில் நிதியுதவி செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை ஹிலாரி ஹீத் என்பவர் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது

கொரோனா நிவாரண நிதியாக மிகப்பெரிய தொகை கொடுத்த டிக்டாக்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்கி வருகின்றன

அமெரிக்காவை நெருங்கும் புயல்: கொரோனாவைவிட பன்மடங்கு சேதமாக வாய்ப்பா?

உலகிலேயே கொரோனாவினால் மிக மோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருப்பது அமெரிக்கா தான். இந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்

பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த கொரோனா நோயாளி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வந்த போதிலும் தமிழக அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து முடிந்தவரை கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறது.