close
Choose your channels

குட்டப்பன் ஆம்பிளையா? பொம்பளையா? 'கூகுள் குட்டப்பா' டீசர்!

Friday, August 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே.

கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அவரே ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஜோடியாக நடித்துள்ளனர் என்பதும், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் குட்டப்பாவாக வரும் ரோபோ செய்யும் சேட்டைகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன.

குட்டப்பா ரோபோ சமையல் செய்வது, காபி பரிமாறுவது, அம்மியில் மிளகாய் அரைப்பது உள்பட பல வேலைகளை செய்கிறது. அது மட்டுமின்றி வயலில் நாத்து நடுவது உள்பட விவசாய வேலைகளையும் செய்கிறது. இந்த ரோபோவை பார்த்து அது ஆம்பிளையா? பொம்பளையா? என அப்பாவியாக ஒரு பெண் கேள்வி கேட்கும் காட்சியும் டீசரில் உள்ளது.

முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் மலையாளத்தை போலவே தமிழிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment