தமிழ் திரைப்பட காமெடி நடிகருக்கு திருமணம்: அமெரிக்க பெண்ணை மணக்கிறார்

  • IndiaGlitz, [Saturday,June 20 2020]

தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஒருவர் அமெரிக்காவில் படித்த பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது 

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, லட்சுமி மேனன் நடித்த கும்கி என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் அஸ்வின். இவர் மேலும் ’வந்தான் வென்றான்’ ’தில்லு முல்லு’ ’நையாண்டி’ ’நெடுஞ்சாலை’ ’கணிதன்’ ’அச்சமின்றி’’பாஸ் என்ற பாஸ்கரன்’ உள்பட பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளர் சாமிநாதன் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கும்கி திரைப்படத்தில் அவருடைய கேரக்டர் புகழ்பெற்றதால் அவருடைய பெயர் கும்கி அஸ்வின் என்று கோலிவுட்டில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் கும்கி அஸ்வின் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த வித்யாஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்யவிருக்கிறார். வித்யாஸ்ரீ அமெரிக்காவில் படித்தவர் என்பது குறிப்பிட தக்கது

இந்த காதலுக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சமீபத்தில் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கும்கி அஸ்வின்-வித்யாஸ்ரீ திருமணம் வரும் 24ஆம் தேதி அஸ்வின் வீட்டில் எளிமையான முறையில் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தில் இரு வீட்டார்கள்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

More News

56 வயதிலும் கடுமையான உடற்பயிற்சியை செய்யும் தமிழ் நடிகை

56 வயது தமிழ் நடிகை ஒருவரின் கடுமையான உடற்பயிற்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

WHO: எப்படியும் இந்த ஆண்டு கிடைத்துவிடும்... நெஞ்சில் பாலை வார்க்கும் புதிய அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலகில் அனைத்து நாடுகளும் திண்டாடி வருகின்றன.

சென்னையில் முழு ஊரடங்கு மேலும் நீடிக்குமா? முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருவதை அடுத்து முழு ஊரடங்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் முதல்வர் பழனிசாமி

கொரோனாவுக்கு சென்னையில் 22 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

அடுத்த ரவுண்டுக்கு தயாராகிட்டாங்க போல...  கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கும் சீன மீன் மார்க்கெட்!!!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் புதிய வகை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவி வருவதால் மீண்டும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது