வெளிநாட்டில் ரொமான்ஸ் செய்யும் சுந்தர் சி - குஷ்பு: க்யூட் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,October 02 2022]

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளான சுந்தர் சி - குஷ்பு வெளிநாட்டில் ரொமான்ஸ் செய்யும் கியூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அவை தற்போது வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூ, ரஜினி கமல் உள்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார் என்பதும் கடந்த 2000ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர்

இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாளை அவர் தனது கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

வெளிநாட்டு லொகேஷன்களில் சுந்தர் சி - குஷ்பூ ரொமான்ஸ் உடன் இருக்கும் புகைப்படங்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவை தற்போது வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பு தயாரிப்பில் உருவாகியுள்ள ’காபி வித் காதல்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


 

More News

சேலையை இப்படி கூட கட்டலமா? ஸ்ரேயா சரண் போட்டோஷூட்டை கலாய்த்த நெட்டிசன்கள்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரேயா சரண் என்பதும் இவர் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

விஜய்சேதுபதியின் சைலண்ட் படம்: வேறு யார் யாரெல்லாம் இருக்காங்க?

விஜய் சேதுபதி நடித்து வரும் சைலண்ட் படம் ஒன்று உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ ஒன்றின் மூலம் வெளியாகியுள்ளது.

'எல்லாத்தையும் தின்னு முடிச்சிட்டு இப்ப மனுசக்கறியா? 'பவுடர்' டிரைலர்

நிகில் முருகன் நடிப்பில் உருவான 'பவுடர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அஜித்தின் 'துணிவு' படப்பிடிப்பு முடிவது எப்போது? ரிலீஸ் இந்த தேதியில் தான்!

அஜித் நடித்துவரும் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்.. பிக்பாஸ் இந்த சீசன் ஃபுல்லா விஜய் டிவி புரடொக்ட்ஸ் தானா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக வெற்றிகரமாக இருந்த நிலையில் 6வது சீசன் வரும் 9ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே.